சொர்க்கத்தின் குழந்தைகள் ஆசிரியர் :தி.குலசேகர்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:157

தேதி:30-12-2022

புத்தகம் எண்ணிக்கை:157

புத்தகத்தின் பெயர்: சொர்க்கத்தின் குழந்தைகள்         

ஆசிரியர் :தி.குலசேகர் 

விலை : 50.           

பக்கங்கள் :90      

பதிப்பகம் :சந்தியா                                                     

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


        *மஜீதி எழுதிய "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்" என்ற ஈரானிய திரைக்கதையை மூலமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நாவல் 

 

*ஏழை குழந்தைகளின் வாழ்வில் 20 ரூபாய் காலனி ஏற்படுத்திக் கூடிய நிகழ்வுகளே இந்த ஆவல் ஆகும்                      

 

   *ஒரு காலணி எவ்வளவு பெரிய துயரத்தையும் திருப்பத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது என்பதே கதையின் மையக்கரு 

 

*குழந்தைகளை குழந்தைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நாவலின் தனிச்சிறப்பாகும்.    

 

 *சாரா மற்றும் அலி என்ற இரு குழந்தைகளே இக்கதையின் நாயகர்கள் 

 

  *அண்ணன் அலி அவன் தங்கை சாரா இருவரின் வாழ்வில் நிகழ்பவையே இந்த நாவலின் கதை 

 

*தவறவிட்ட தன் தங்கையின் காலனி மாற்றாக புது காலனி வாங்க முடியாமல் தவிக்கும் இடத்தில் அண்ணனின் அன்பை நாவல் பதிவு செய்கிறது 

 

*காலணி இல்லாமல் பள்ளிக்குள் விடமாட்டார்கள் என்பதால் காலையில் அண்ணன் காலணி அணிந்து தங்கை செல்வதும் மீண்டும் பள்ளி முடிந்தவுடன் அண்ணன் அணிந்து பள்ளி செல்வதும் என்று இருவரும் மாறி மாறி செல்கின்றனர் இந்த நிலையை படிக்கும்போது நமக்கு கண்களில் கண்ணீர் அல்ல ரத்தம் வருகிறது 

 

*பற்றாத காலணி அணிந்து கொண்டு சிறுமி அடையும் துன்பங்களை படிக்கும் போது நமது மனதை நம்மாலே தேற்ற முடியவில்லை. 

 

*மாரத்தான் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றால் காலனி கிடைக்கும் என்பதால்மூன்றாவது பரிசைக்குறி வைத்து ஓடும் அண்ணன் முதல் பரிசு  பெறுகிறான் இந்நிகழ்வில் குழந்தையின் உள்ளத்தை பதிவு செய்கிறார் 

 

*ஏழ்மையிலும் கடவுளின் சர்க்கரை கட்டி பாக்கெட் செய்வதை எடுக்காத பெற்றோர்களின் நிலைமை ஏழ்மையிலும் பெருமையாக உள்ளது 

 

*குழந்தைக்காகவும் குடும்பத்திற்காகவும் வாழும் பெற்றோர்கள் "சொர்க்கத்தின் குழந்தைகள்" படிக்க வேண்டிய புத்தகம்

 

*படிக்க படிக்க நாம் குழந்தை பருவத்திற்கு சென்று விடுகிறோம் 

 

*குழந்தைகளின் உலகத்தை உணர்வுகளை புரிந்து கொள்ள மிக அருமையான அற்புதமான புத்தகம்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments