குடியரசு தின தகவல்கள் 2024

                     








ஜனவரி 26-ம் தேதி எதற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள்? குடியரசு தினம், அதனால் விடுமுறை என்று நீங்கள் சட்டென்று சொல்லிவிடுவீர்கள்.

 

சரி குடியரசு தினம் என்றால் என்ன? அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?

 

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

 

எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்துவந்தார்கள். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

 

அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது; சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

 

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

 

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

 

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

 

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அதனால்தான் உங்களுக்கு விடுமுறையும் கிடைக்கிறது.

 

குடியரசு தினம் என்றால் என்ன என்று இனி யாராவது கேட்டால், பளிச்செனப் பதில் சொல்லிவிடுவீர்கள் இல்லையா?


      “ஜனகண மன...' இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


                தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் வங்க மொழியில் எழுதப்பட்ட பாடலாகும் வந்தே மாதரம் ஒரு நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

              இந்திய விடுதலைக்கு முன்னர் வந்தே மாதரம் (தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது.

                  இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். 


National Anthem Of India Jana Kana Mana & Neerarum Kadaludutha Mp3 Song :-


JANA KANA MANA MP3 SONG : Download Here 



Neerarum_Kadaludutha MP3 SONG : Download Here 


REPUBLIC DAY SPEECH PDF : Download Here


விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு தமிழில் PDF : Download Here

தாயின் மணிக்கொடி பாரீர்!!பாடல் வரிகள் தமிழில்!!!     ( thayien manikkodi pareer)


பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

2.பட்டுத் துகிலென லாமோ?-அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித்தாலும் -அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)

3.இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

4.கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

5.அணியணி யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் -வீறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்)

6.செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந்
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்
சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

7.கன்னட ரொட்டியரோடு -போரிற்
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்
பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும்
பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர். (தாயின்)

8..பூதல முற்றிடும் வரையும் -அறப்
போர்விறல் யாவும் மரப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

9.பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்
துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

10.சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்)


தாயின் மணிக்கொடி - Thaiyin Manikodi (Movie Song Lyrics)


ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்

(இசை)

ஆண் : தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

(இசை)

என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

***

ஆண் : வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ
ஆ&பெ குழு : பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ
ஆண் : தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ
ஆ&பெ குழு : பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ
ஆண் : பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

(இசை)

{பெ1 குழு : யெயெயெயெயெயெயெ.. யெயெயெயெயெயெயெ
யெயெயெயெயெயெயெ.. யெயெயெயெயெயெயெ

பெ2 குழு : சொம சாயொ.. சொம சாயொ.. சொம சாயொ.. சொம சாயொ..} Overlap

****

பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்


ஆண் : சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ
ஆ&பெ குழு : வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்
ஆண் : மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ
ஆ&பெ குழு : சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக புயல் போல் விரைக
அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவேண்டும் புதிய இந்தியா

சுதந்தரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது

காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

ஆண்: ஜெய்ஹிந்த் பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த் பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த் பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த் பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்


Post a Comment

0 Comments