*தினம் ஒரு புத்தகம்*
நாள்:177
தேதி:19-01-2023
புத்தகம் எண்ணிக்கை:177
புத்தகத்தின் பெயர் :பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர் : தொ.பரமசிவன்
பக்கங்கள்: 231
விலை :100
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*அறியப்படாத தமிழகம் தெய்வங்களும் சமூக
மரபுகளும் ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும்
உள்ளடக்கிய தொகுப்பு ஆகும்.
* மண்ணும் மண்ணின் உயிர் வகைகளும் பயிர்
வகைகளும் இவற்றின் ஊடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை
இந்நூல் ஏற்படுத்துகிறது
*நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதிகள்
அல்லாமல் தன் உணர்ச்சியோடு காண வைக்கிறது
*தொ.பரமசிவன் அவர்களிடம் இருந்து தெறிக்கும்
கருத்துக்களும் சான்று ,சான்று மேற்கொள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை
ஏற்படுத்தக்கூடியவை
*நாம் தமிழராக பிறந்துவிட்டு நமது நாட்டில்
இவ்வளவு விஷயங்களை தகவல்களை அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என வருத்தப்பட
வைக்கிறது
*பல அறிவியல் பூர்வமான தகவல்களை ஆதாரங்களுடன்
நூலில் அழகாய் விவரிக்கிறார்
*ஒவ்வொரு தகவலையும் படிக்க படிக்க மிக
ஆச்சரியமாக உள்ளது
*இந்த நூலைப்படிக்க படிக்க நாம் தமிழர் என்பதில்
பெருமிதம் ஏற்படுகிறது
*தமிழ் என்ற சொல் தமிழருக்கு இனிமையானது
"இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று பிங்கல நிகண்டு
குறிப்பிடுகிறது
*தமிழ் என்ற சொல்லை இனிமை ,பண்பாடு அகப்பொருள்
என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர்
*சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது என குறிக்க
வந்த சேக்கிழார் "அசைவில் செல்லும் தமிழ் வழக்கு " என சைவத்தையும்
"அயல் வழக்கு" என சமணத்தையும் குறிப்பிடுகிறார்
*"தெள்ளமுதின் மேலான முத்திக்னியே என்
முத்தமிழே " என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடு தூது
குறிப்பிடுகிறது
*முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்கு உதவிய
படைத்தலைவன் ஒருவனுக்கு "செம்பியன் தமிழவேள்"என்ற பட்டங்களை
கொடுத்துள்ளதாக சான்றுள்ளது
*நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால்
அதனை அமிழ்தம் என்று வள்ளுவர் குறிப்பிடுவார்
*நீர் நிலைகளுக்கு தமிழர்கள் வழங்கி வந்த
பெயர்கள் பல சுனை, கயம் பொய்கை ,ஊற்று என்பன தானே நீர்கசிந்த நிலப்பகுதிகளாகும்
*குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும்
*குளிப்பதற்கு பயன்படும் நீர்நிலைக் குளம்
என்பதாகும்
*உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊரணி என்பதாகும்
*ஏர் தொழில் பெயர் தொழிலுக்கு பயன்படும்
நீர்நிலை ஏரி
*மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை
ஏந்தல் என்றும்
*கண்ணாறுகளை உடையது கண்மாய்என்றும் தமிழர்கள்
பலவிதமாக பழங்காலத்தில் அழைத்துள்ளனர்
*சமைத்தல் என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல்
என்று பொருள்
*அடுப்பில் ஏற்றி சமைப்பது அடுதல் எனப்படும்
சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை தமிழர் வீட்டு அமைப்பில் வீடு
எந்த திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு
மூளையில் அமைக்கப்படுகிறது
*வற்றல் என்பது மழைக்காலத்திற்கு என சேமிக்க
சேமிக்கப்பட்ட உணவாகும் காய்கறிகள் நிறைய கிடைக்கும் காலத்தில் உப்பு கலந்த மோரில்
ஊறவைத்து பின்னர் வெயிலில் நீர்வற்ற காயவைத்து சேமிப்பர்
*உப்பு என்ற தமிழ் சொல்லுக்கு சுவை என்பதே முதல்
பொருள் இனிப்பு கசப்பு துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை
அடிப்படையாகக் கொண்டு பிறந்தது
*சமையலுக்கு பயன்படுத்தும் உப்பிற்கு வெள்ளுப்பு
என்று பெயர்
*பழந்தமிழ் நாட்டு பொருளாதாரத்திலும் தமிழ்
பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும்
வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது
*தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து
கொண்டு பயன் தருவதால் வெள்ளுப்பு என அழைக்கப்படுகிறது
*ஆடி அறுதி எனப்படும் ஆடி மாத கடைசி நாளிலும்
தைப்பொங்கலுக்கு மறுநாளான கரி நாளிலும் விருப்பத்துடன் புலால் உண்ணுவது தமிழர்
வழக்கமாகும்
* சங்ககால சங்க இலக்கியத்தில் வீடு என்பதற்கு
பதிலாக மனை என்ற சொல்லே காணப்படுகிறது உண்டு
*ஆய்வு நெறியில் சிறு தெய்வம் பெருந்தெய்வம்
என்ற சொற்களை தாழ்ந்தவை, உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது
உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிகப்பழைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும்
பேணி நிற்பவையாகும்
* மனிதன் இயற்கையே தனக்கு உணவை அளிக்கிறது என்று
அறிந்து கொண்டான் அச்சமும் உணவுத்தேவையையும் கொண்ட மனிதன் இயற்கையின் பேராற்றலை
வணங்கத் தலைபட்டான்
*தமிழர்கள் கூட 'முருகு' எனப்பட்ட ஒரு ஆற்றலையே
முதலில் வணங்கினார்கள் பின்னர் தனிமனிதச் சிந்தனை வளர்ந்த போது தான் 'முருகு'
என்பது 'முருகன்'ஆக்கப்பட்டான்
*ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச்சேவைகள் மாற மாற
தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின
*ஹரப்பா நாகரிகத்தில் பசுபதி வழிபாடு வேதத்தில்
உள்ள ருத்ர வழிபாடு தமிழ்நாட்டில் நிலவிய தறி வழிபாடு இந்த மூன்றும் கலந்தது தான்
சிவ வழிபாட்டின் அடிப்படை
*வட இந்தியாவில் பிறந்த கந்த வழிபாடு
தமிழ்நாட்டின் முருக வழிபாடு கிழக்கிந்திய பகுதிகளில் பிறந்த கார்த்திகேய வழிபாடு
இவற்றின் கலவைதான் இன்று உள்ள முருக வழிபாடு
*ஆதி மனித கூட்டம் உணவு தேவைக்காகவே
அச்சத்தோடும் ஆச்சரிய உணர்வோடும் இயற்கையை வணங்கியது
*சமூகத்தின் ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் சமூக
சேவைகள் மாறி வளர்ந்து பெருகும் போது கதைகளும் புராணங்களும் அதற்குத் தகந்தவாறு
வளர்ந்தன.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments