மாட்டுப் பொங்கல் வழிபடும் முறை :-
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
மாட்டுப் பொங்கல் வைக்க நல்லநேரம்.. கால்நடைகளை அழகுப்படுத்த தயாராகிவிட்டீர்களா?
மாட்டுப் பொங்கல்.. வழிபடும் முறை..!!
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும்
உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து
தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று, நல்லெண்ணெய் தேய்த்து
குளித்து, தொழுவத்தை தூய்மைப்படுத்தி கோலம் போட்டு, நல்ல நேரத்தில் ஒரு பெரிய
பானையில் பொங்கலிடும்போதே, அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு
பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை
போன்ற உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருட்களையும் கழுவிக் காயவைத்து
பொட்டிட்டு பொங்கல் மேடையில் வைத்துவிடுங்கள்.
மாட்டுப் பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம்
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
நண்பகல் 12.35 மணி முதல் 02.35 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 07.00 மணி வரை
இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து
பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலையால் மாலைகள்
போட்டு, பலூன்கள் கட்டுங்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட்
உட்பட அனைத்து கருவிகளையும் பொட்டிட்டு அழகுப்படுத்துங்கள்.
வண்டியிழுக்க உதவும் காளைமாட்டிற்கும்,
காலை-மாலை பால் தரும் பசுமாட்டிற்கும், எருமை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும்
கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, வண்ணங்களை (paint) கொம்புகளில்
அடித்திடுங்கள். கொம்புகளின் இடையில் பலவண்ண ரிப்பன்கள், குஞ்சம், சலங்கை, பலூன்களை
கட்டி, நெற்றியில் மஞ்சள் குங்குமம், சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை
போட்டு புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்திடுங்கள்.
தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த
பயிர்களை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச்சர்க்கரை என எல்லாவற்றையும்
பூஜைக்காக எடுத்து வையுங்கள். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் மாட்டுப்
பொங்கல் என்று எல்லோரும் குரல் கொடுத்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை
காட்டுங்கள். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல்,
பழம் பிரசாதத்தை ஊட்டிவிடுங்கள். பிறகு மாடுகளை சுத்தி திருஷ்டி கழித்து விட்டு
வழிபடுங்கள்.
உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை
இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க
என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் மாடுகள் நமக்கு
பயன்படுகிறது.
சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை
செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து
அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி
வருவார்கள். வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை
வைத்து அதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம்.
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்......
"இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..."
-------------
பொங்கல் தமிழர் அடையாளத்தின் முதன்மையான விழா ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் கொண்டாடிய அதே பண்டிகையை நாம் இப்போதும் கொண்டாடுகிறோம்.
வழக்கமான பண்டிகைகளில் கிழங்கு வகைகளைப் படையலிடுவது இல்லை. ஆனால், பொங்கல் திருநாளில் சேனை, சேம்பு, கருணை, வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை படைக்கிறார்கள்.
பல்வேறு பண்டிகைகளுக்கு 'தீட்டு' உள்ளது. ஆனால், பொங்கலுக்கு அது இல்லை. (குடும்பத்தில் அல்லது பங்காளிகள் இறந்தால் பண்டிகைகளை அந்த ஆண்டில் கொண்டாடுவது இல்ல. ஆனால், பொங்கலை மட்டும் தாய்மாமன் மூலம் படைக்கும் பழக்கம் பல வீடுகளில் இருக்கிறது).
இவையெல்லாம் பொங்கல் மிகப்பழமையான பண்டிகை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. சங்ககாலத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையை புறநானூற்றுப்பாடல் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
"வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்"
(புறநானூறு: 22)
பொருள்:
"செந்நெல்லினை அறுத்து கரும்பினை கட்டி அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட கூரை வீடுகளும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும், தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போல பொலிவுடன் காட்சி தருகின்றன"
-------------
"அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்”
- (புறநானூறு: 168)
பொருள்:
"செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும் மலையில் அருவி ஆர்ப்பரிக்கும். பன்றிகள் கிழங்குகளுக்காக பூமியைக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதால், அந்த நிலத்தை தாங்கள் தனியே உழாமல், மலைக்குறவர் தினையை விதைத்திருப்பார்கள்.
தினைப்பயிர் வளர்ந்து, கதிர் முற்றிய நிலையில் இருக்கும்போது, அதனை அறுத்து வந்து, நுரைபொங்கும் மலைப்பசுவின் பாலை உலை நீராக வைத்து, சந்தன விறகை எரித்து, சோறுபொங்கி, வீட்டு முற்றத்தில் வைத்து, அகலமான வாழை இலையில் வரும் விருந்தினருக்கு விருந்து படைப்பார்கள்."
-------------
தமிழர், தமிழ்நாடு எனும் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு பெருமிதம் ஆகும்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
பிறக்க இருக்கும்
#தை...*
நம் அனைவருக்கும்_
ஆரோக்கியத்... #தை..,*
நலத்................... #தை,*
வளத்.................. #தை,*
சாந்தத்............... #தை,*
சமத்துவத்......... #தை,*
நட்பில் சுகத்..... #தை,*
பந்தத்................. #தை,*
பாசத்................... #தை,*
நேசத்.................. #தை,*
இரக்கத்.............. #தை,*
உற்சாகத்........... #தை,*
ஊக்கத்............... #தை,*
ஏற்றத்................. #தை,*
சுபிட்சத்............... #தை,*
கொடுத்து...
ஆணவத்.... #தை,*
கோபத்........ #தை,*
குரோதத்..... #தை,*
சுயநலத்...... #தை,*
பஞ்சத்.......... #தை,*
வஞ்சத்......... #தை,*
வன்மத்......... #தை,*
துரோகத்...... #தை,*
அலட்சியத்... #தை,*
அகங்காரத்... #தை,*
_எடுத்து..._
எல்லோரும் _ இனிமையாய் வாழ...
#அனைவருக்கும் இனிய #பொங்கல் #நல்வாழ்த்துக்கள்..._*
போகிப்பண்டிகை பற்றிய தகவல்கள் :-
போகிப்பண்டிகை... காப்பு கட்ட உகந்த நேரம்...!
காலை 07.35 மணி முதல் 08.05 மணி வரை
காலை 11.00 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 05.35 மணி முதல் 06.35 மணி வரை
போகிப்பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப்பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகி விட்டது.
வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போகிப்பண்டிகை என்றழைக்கப்படுகிறது.
பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு, மாவிலை கட்டி, பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அதுமட்டுமல்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலமிட்டு அழகு படுத்துவது தமிழர் பண்பாடு.
இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுவிடும் நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.
காப்பு கட்டுதல் :
போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்பு கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்பு கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்பு கட்டுவதன் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைப்பதற்காகவும், சுத்தமாகிய வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காகவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படுகிறது.
காப்பு கட்ட உகந்த நேரம்
காலை 07.35 மணி முதல் 08.05 மணி வரை
காலை 11.00 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 05.35 மணி முதல் 06.35 மணி வரை
மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். பூளைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும். சீரான சிறுநீர்போக்கு ஏற்படுத்தும். விஷ முறிவுக்கு உதவும். வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை தடுக்கும். ஆவாரம்பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும்.
இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :
மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாக திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.
பழைய பொருட்களை எரித்தல் :
வீட்டை சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். அதை போகியன்று தீயிலிட்டு கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும்.
போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள் ......
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம்., நமது www.kanimaths.com website இல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை Full Syllabus..,
==> Full Portion Model Question Paper Collection
==> Public Exam Question & Answer Key
==> Chapter Wise Question Collection
==> Slow Learner Study Material
==> Minimum Level Study Material
==> Topper Study Material
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும் பயன்படும். மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
UPLOAD YOUR DOCUMENTS =>>> CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் நமது இணையதளங்களில் போட்டித் தேர்விற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
===> Neet Study Material - Tamil & English
===> TNPSC GROUP - II / II A Question & Answer
===> TN - TET MODEL QUESTION & ANSWER
===> NTSE QUESTION & ANSWER
===> TRUST STUDY MATERIAL
===> TRUST QUESTION & ANSWER
===> NMMS STUDY MATERIAL
===> NMMS MODEL QUESTION & ANSWER
Competative Exam Study Material & Question
STD - 1 TO 12TH STUDY MATERIAL COLLECTION
by..,
Kani Maths Educational Group
0 Comments