தினம் ஒரு புத்தகம்*
நாள்:171
தேதி:13-01-2023
புத்தகம் எண்ணிக்கை:171
புத்தகத்தின் பெயர் : உறவுகளின் உயிர்ப்பு
ஆசிரியர்: முனைவர்.ஹெலினா
பக்கங்கள் : 128
விலை : 90
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*சங்ககிரி புத்தகக் கண்காட்சியில் "தினம்
ஒரு புத்தகம் "பதிவு செய்வதை பாராட்டி திரு வெங்கடேஸ்வர குப்தா அவர்களால்
எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகம் இது வெங்கடேஸ்வர குப்தா அவர்களுக்கு
நன்றி
*இந்தப்புத்தகத்தின் அட்டைப்படம் நீலமும்
பச்சையும் கலந்த ஒளித்துகள்களுக்கு இடையே வெள்ளை நிறத்தில் புத்தகத்தின் தலைப்பு
இதுவே இந்த புத்தகத்தை நோக்கி நம்மை ஈர்க்க வைக்கிறது
* வானத்தின் வண்ணம் நீலம் பூமியின் வண்ணம்
பசுமை.இரண்டுக்கும் நடுவில் வெள்ளை வண்ணத்தில் புத்தகத்தின் தலைப்பு இதுவே ஒரு
புதுக்கவிதையின் பரிணாமம்.
*பின்புற அட்டையில் ஊக்கமூட்டும் கவிதை வரிகளின்
தொகுப்பு நம் மனதைக்கவர்ந்து உடனே உள்ளே படிக்க வைக்கிறது. இது கவிஞரின் கவிதைக்கு
கிடைத்த வெற்றி
* முயற்சி அது
இலக்கை நோக்கிய
பயணம் ...!
*மூன்று முறை வாங்கியவுடனே படித்து விட்டேன்
படிக்க படிக்க பிரமிப்பு வார்த்தைகளின் நயம் தேர்ந்தெடுத்த குறளின் சிறப்புகள்
*திருக்குறளை குறளாகப் படித்து பொருள் கண்ட
நமக்கு திருக்குறளை கவிதை வடிவில் அதன் குறளின் அம்சத்தை எடுத்துக்கொண்டு அதற்கு
தகுந்தவாறு கவிதைகள் படைத்துள்ள விதம் மிகச் சிறப்பாக உள்ளது
*குறளின் பொருள் மாறாமல் அந்தக் குறளின்
மையக்கருத்தை மிக அழகாக எளிமையாக மனதிற்கு புரியும் வண்ணம் கவிதையாக படைத்துள்ளது
மிக அருமை
*ஒவ்வொரு கவிதையும் படிக்க படிக்க நம் சிந்தனைகளை சிறகடிக்க
வைக்கிறது
*திருக்குறளில் உள்ள காமத்துப்பாலுக்கு கவிஞர்
கண்ணதாசன் கவிதை வடிவில் விளக்கம் எழுதியுள்ளார் நான் படித்த குறளுக்கு கவிதை
வடிவிலான விளக்கப் புத்தகம் அது ஒன்று மட்டுமே ஆனால் தற்போதுஇந்தப்புத்தகம் அறம்
,பொருள் ,இன்பம் மூன்றிற்கும் மிகச்சிறந்த திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அதனை
கவிதை வடிவில் எழுதியுள்ளார் பாராட்ட வேண்டிய முயற்சி.
*இந்த கவிதைகளைப்படிக்கும் போது அந்த குறளின்
மையக் கருத்து மாறாமல் மிக அழகாக எளிமையாக புரிகிறது திருக்குறளுக்கு உரை படிப்பதை
விட இந்த கவிதையை படிக்கும் போது ஈமனதில் எளிமையாக பதிகிறது
*புதுக்கவிதை வடிவில் குறளுக்கு நவீன விளக்கம்
சிறப்பை அளிக்கிறது
*என்னை கவர்ந்த என் மனதை பாதித்த மனதில் பதிந்த
கவிதை வரிகள்
*அன்பின் விளக்கம் நம்மை அன்பிற்கு அடிபணிய
வைக்கிறது
"அன்பு
அகத்தின் உணர்வு
சொல்லின் இனிமை
வாழ்வின் செயல்
மூன்றும் கலந்த
முக்கனி "
*நட்புக்கு புதிய வரையறை நம்மை வியக்க வைக்கிறது
"கண்டவுடன்
கண் மலர்தல் நட்பன்று
முகம் மலர்தல் நட்பன்று
அன்பினால்
அகமலரும் நிலையே"
* கல்வி வாழ்க்கையை புரிய வைப்பது என்பதை மிக அழகாக புரிய வைக்கிறார்
" கற்பவை கற்க
கற்க வேண்டியதை
உலகத்தோடு ஒட்ட ஒழுகி
வாழும்
வாழ்க்கை கல்வியை "
*இன்றைய கல்விமுறையில் மாணவர்களை தேர்வுகள்
உளவியல் ரீதியாக பாதிக்கிறது இந்த பாதிப்புகளை போக்க மிக அழகாக விளக்கம் தருகிறார்
"தேர்வு
சதா ரணம் அன்று
சாதாரணம்
எனநினைவில்
கொள்ளுதல
வேண்டும்"
*இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாம்
இளைஞர்களை கனவுக்கண்டு நல்லவற்றை படைக்க சொன்னார் இதை அழகாக கவிதை வடிவில்
விலக்கியுள்ளார்
" கனவு காணுங்கள்
இதனை என்றார்
கனவு கண்டு
மெய்ப்பித்த கலாம் "
*பசித்தவுடன் சாப்பிடுங்கள் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மிக அழகாக கவிதைப்படுத்தி உள்ளார்
"உண்ட உணவு முற்றும்
குடலை விட்டு நீங்கி
குருதியில் சேர்தலை அறிந்து
பசியறிந்து புசித்தல் நன்று"
* கருணை கண்கள் என்ற தலைப்பில் நம் அகக் கண்ணை
திறந்து விடுகிறார்
"முகத்தில் வீற்றிருக்கும்
இருவிழிகள்
அகத்தை உணர்த்தும்
கருவிழிகள்"
* பெண்களின் பல பரிணாம வாழ்க்கையை இதைவிட
யாராலும் உணர்த்த முடியாது மிக அழகாக பெண்களின் நிலைகளை கவிஎழுதியுள்ளார்.
"பெண்ணே நீ
இதயம் களவாடும்
இன்பக் காதலி
இல்லறம் காக்கும்
இனிய மனைவி
தோள் தாங்கும்
தோழி
உயிர் சுமக்கும்
தாய்மை"
* கண்ணுக்கு மை தீட்டியவர் பழங்கால பெண்கள் இவர்
அழகாய் இன்றைய கால பெண்கள் நிலைப்பற்றி கவிதை எழுதி உள்ளார்
"ஐ லைனர்
தீட்டிய கருவிழிகள்
இது இன்று"
*இனிமையான இல்லறத்தின் அடிப்படை ஊடலும் கூடலும்
இதை அழகாய் கவிதை படித்துள்ளார்
"ஊடலும் கூடலும்
வாழ்வில்
அன்பும் இன்பமும்
தருவதால்
உடலை உவந்து
வாழ்வதே சிறப்பு"
* முத்தாய்ப்பான கவிதை
"குறள் வழி வாழ்ந்தால்
வாழ்க்கை
கரும்பென இனிக்கும்
குறள்வழி நடந்தால்
வாழ்க்கை
சிறகடித்து பறக்கும்"
எவ்வளவு உண்மையான வரிகள்
*இப்படி பல கவிதைகளை எழுதிக்கொண்டே போகலாம்
அனைத்தும் அற்புதம்.
*இவருடைய கவிதைகள் அனைத்தும் படிப்பதற்கு இனிய
ஓசை நடையில் உள்ளன எதுகை மோனை, இயைபு முரண் அனைத்தும் கலந்து எழுதியுள்ளார்
*திருக்குறளின் பொருளை மிக எளிமையாக உணர்ந்து
கொள்ள ரசித்து ரசித்து படிக்க இந்த கவிதை நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்
*மேலும் ஒவ்வொரு தலைப்பிற்கு கீழும்
ஆங்கிலத்திலும் அழகாய் கவிதையாக வடித்துள்ளார் ஆங்கில வரிகளும் நம்மை படிக்க
படிக்க வியக்க வைக்கிறது
"Winners
Aim for good
Have goal to reach
Courage to achieve
Work hard to win"
* இக்கவிதையில் ஒவ்வொரு தலைப்பும் ஹைக்கூ போல்
மிக அழகாக உள்ளது
"எனக்குள் கேட்ட
குறளின் குரல்"
இன்னும் பற்பல நூல்களைப்படைக்க குறளின்
குரலுக்கு வாழ்த்துக்கள்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments