STD - 9 SCIENCE TM AUGUST 4 WEEK NOTES OF LESSON

 

தாவர உலகம்

நாள்              : 22..08.2019 – 26.08.2022

வகுப்பு          : 9

பாடம்           : அறிவியல்

பாடப்பகுதி   : தாவர உலகம் - தாவரச்

                           செயலியல்




 



அறிமுகம் :

1.    நாம் உணவினை எதற்காக எடுத்துக் கொள்கிறோம்?

2.    மனிதர்களும் விலங்குகளும் உணவிற்காக இடம்விட்டு நகர்கிறார்கள் அல்லவா? அதனைப் போல் தாவரங்கள் இடம்விட்டு இடம் நகர்கின்றனவா?

3.    இல்லையெனில் உணவினை எவ்வாறு தாவரங்கள் பெறுகின்றன?

4.    மரம் செடி கொடிகளுக்கு இலைகள் இல்லையெனில் என்ன ஆகும்?

5.    சூரிய ஒளி இல்லாமல் தாவரங்களால் உயிர்வாழ முடியுமா?

6.    ஒளிச்சேர்க்கை தாவரத்தின் எந்தப்பாகத்தில் நடைபெறுகிறது?

7.    இரவு நேரங்களில் மரத்தடியில் உறங்கக்கூடாது என்பதற்கானக் காரணம் என்ன?

8.    தாவரங்கள் உணவினை தயாரிப்பதால் அவைகளை நாம் எவ்வாறு அழைக்கிறோம்.

இது போன்ற வினாக்களுக்கு மாணவச் செல்வங்கள் அளிக்கும் விடைகள் மூலமாகவும் சில செயல்பாடுகள் மூலமாகவும் இப்பாடப்பகுதி அறிமுகம் செய்யப்படும்.

 

கற்றல் விளைவுகள் : வாசித்தல், புதிய சொற்களை அடையாளம் காணல், அடிக்கோடிடுதல், பொருளறிதல், கருத்து வரைபடம் வரைதல்,தொகுத்தல்,எழுதுதல், உயர்சிந்தனை வினாக்களை உருவாக்குதல்.

வாசித்தல்: கொடுக்கப்பட்ட இப்பகுதியை நன்கு பொருளுணர்ந்துப் படிக்க வேண்டும். பாடப்பகுதியில் உள்ள புதிய சொற்களை அடிக்கோடிட்டு கலந்துரையாடிப் படிக்கவேண்டும்.

கருத்து வரைபடம்








தாவர அசைவுகள்:

திசைச்சார்பசைவு

திசை சாரா அசைவு

புவிச் சார்பசைவு

வேதிச்சார்பசைவு

நீர்ச்சார்பசைவு

தொடு உணர்வுச் சார்பசைவு

 

ஒளிச்சேர்க்கை  - photo - ஒளி synthesis - உருவாக்குதல்

v  ஜான் பாப்டிஸ்ட்  வான் ஹெல்மாண்ட்

v  நான்கு காரணிகள் : நீர் ,பச்சையம் ,கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சூரிய ஒளி





 

வாயு பரிமாற்றம்:

   நீராவிப்போக்கு :

1.    இலைத் துளை நீராவிப்போக்கு  ( அதிக அளவு நீர் இழப்பு 90- 95 விழுக்காடு)

2.    கியூட்டிக்கிள் நீராவிப் போக்கு

3.    பட்டைத் துளை நீராவிப்போக்கு

 

பெரும ஊட்டம்

கார்பன், ஹைட்ரஜன் ,ஆக்சிஜன் ,நைட்ரஜன் ,பொட்டாசியம் ,கால்சியம் ,மெக்னீசியம் சல்ஃபர் மற்றும் பாஸ்பரஸ்

நுண் ஊட்டக் கனிமங்கள்

இரும்பு , மாங்கனீஸ்,காப்பர்,போரான், மாலிப்டினம், சிலிக்கான், கோபால்ட்

தொகுத்தலும் வழங்குதலும்: 

மாணவச் செல்வங்கள் வெவ்வேறு குழுக்களாகத் தொகுத்தவற்றை குழுவாக வழங்க வேண்டும்.




1.பின்வருவனவற்றுள் எது தூண்டல் அசைவு?

        அ. சூரிய ஒளிக்குப் பதில்விளைவு தருதல்      

        ஆ.வேர்கள் தரை நோக்கி வளர்தல்

        இ. தண்டு மேல்நோக்கி வளர்கிறது            

        ஈ. மலர்மூடுதல் மற்றும் விரிதல்

 

2. எந்தத் தாவரம் திசைச் சார்பசைவைக்காண்பிக்கிறது?

           அ. சூரிய காந்தி                         

          ஆ. வீனஸ் பூச்சிக்கொல்லித் தாவரம்

          இ. தொட்டாற்சுருங்கி               

          ஈ. மேற்கூறிய அனைத்தும்

 

3. ஒளிச்சேர்க்கையின் போது

          அ. சேமிக்கப்பட்டஉணவைத் தாவரங்கள் பயன்படுத்துகின்றன

          ஆ. ஒளி ஆற்றல், வேதி ஆற்றலாகமாற்றப்படுகிறது

          இ. வேதி ஆற்றல், ஒளி ஆற்றலாகமாற்றப்படுகிறது

          ஈ. இலைகளில்தயாரிக்கப்பட்டஉணவு தாவரத்தின் அனைத்துப்    

               பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது.

 

1.    ஒளிச்சேர்க்கையின் போது______ வெளியிடப்படுகிறது.

 

            அ. ஆக்சின்                            

           ஆ. கார்பன் டை ஆக்சைடு

 

              இ. குளூக்கோஸ்

              ஈ. ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

எழுதுதல்: 

சில உயர்வகைச் சிந்தனை வினாக்களை வழங்கி எழுதி வர போதுமான ஆலோசனைகளை வழங்கி எழுதி வரச்சொல்லப்படும்.

குறைதீர் கற்றல்:

கடினப் பகுதிகளை அடையாளம் கண்டு ICT மூலம் எளிமைப்படுத்தி விளக்கப்படும்

தொடர்பணி : 

ஒளிச் சேர்க்கைக்கான சோதனையை செய்யச் சொல்லுதல்

 

Special Thanks to ., 

அன்புடன் : இரா.சக்திவேல்

அரசு உயர்நிலைப் பள்ளி,

மணக்கால் அய்யம்பேட்டை 610104.

திருவாரூர் மாவட்டம்







Post a Comment

0 Comments