*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:48
தேதி:12-09-2022
புத்தகம் எண்ணிக்கை:48
புத்தகத்தலைப்பு: இப்படிக்குத் தங்கள் அன்புள்ள
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
விலை:130
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
** மாணவர்களின் ஆழ்ந்த அன்பின் காரணமாக முன்மாதிரி ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள் அன்பான மாணவர்களுக்கு ஆசிரியரின் பதில் கடிதங்கள் போன்றவற்றின் தொகுப்பே " இப்படிக்கு தங்கள் அன்புள்ள" என்னும் நூல் ஆகும்.
** மொத்தமாக 42 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளது
** தம்பிக்கு கடிதம் ,தங்கைக்கு கடிதம் படித்துள்ளோம் இந்த வகையில் ஆசிரியருக்கு மாணவர்கள் கடிதம் வியப்பாக உள்ளது.
** மாணவர்களின் கடிதத் திற்கு ஆசிரியர் பதில் ஆச்சரியமானதாகவே உள்ளது.
** மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் ஆசிரியர்களை என்றுமே மாணவர்கள் மறக்கமாட்டார்கள் என்பதை இக்கடிதங்கள் உணர்த்துகிறது
** ஆசிரியர் மாணவர்கள் நலன் விரும்பி செய்த ஒவ்வொரு நல்ல செயல்களையும் மாணவர்கள் பாராட்டுகிறார்கள். எல்லாவற்றையும் விட மேலானது ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களை ஆழ்ந்து உற்று நோக்கி அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளார்
** ஆசிரியர் மீது மாணவர் வைத்த நேசங்கள் சில கடிதங்களில் படித்தது
** தங்கள் நூலகத்தைக் கண்ட பின்புதான் நூல்களை அதிகமாகச் சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது, நூல்களைச் சேகரித்தும் வருகிறேன்
* *வாசிப்பு என்பதே தெரியாத எனக்கு முதலில் கற்றுக்கொடுத்த ஆசான் நீங்கள்
** என்னையும் தாண்டி என் மாணவன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற உங்கள் உயர் எண்ணத்தை எண்ணி பெருமையுறுகிறேன் ஐயா
**ஆசிரியரின் அன்பான பதில்கள்
* எனது நூல்கள் சேகரிப்பு உங்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி.எனது ஆசிரியர்களின் சேகரிப்புதான் என்னையும் சேகரிக்க வைத்தது.
* வீடுதோறும் நூலகம் அனைவரின் கனவு
* விரிவாகப் படியுங்கள்,படித்தவற்றை சிந்தியுங்கள் உண்மை என்பது மனதிற்குப்படுவதோடு உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து நில்லுங்கள்
*இலக்கியங்களை ,மொழியமைப்பை,மொழியின் கட்டமைப்பை விளக்கிக் கொண்டால் பிழைகளை முழுவதுமாகத்தவிர்த்திட முடியும்
* ஓர் ஆசிரியர் தொடர்ந்து கற்கும் நிலையில் இருந்தால் செயல் திறன்மிக்கவனாக இருக்கலாம.
* நிறைய படியுங்கள் ,படிக்க படிக்க எது சரி என்ற வினா எழும் உண்மை புலப்படும்,கண்ணோட்டம் தெளிவுபடும்.உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனமும் அதன் பின்னால் நிற்கும்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments