*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:49
தேதி:13-09-2022
புத்தகம் எண்ணிக்கை:49
தலைப்பு:என் சீஸை நகர்த்தியது யார்
ஆசிரியர்: ஸ்பென்சர்ஜான்சன்,எம்,டி
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*மிக ஆழமான உண்மைகளை வேடிக்கையாகவும் அறிவு புகட்டுகின்ற விதத்திலும் வெளிப்படுத்தும் ஓர் உருவகக் கதைதான் என் சீஸை நகர்த்தியது யார்.
** புதிர்க்கட்டத்தில் உள்ள சீஸை தேடி ஸ்னிப் ,ஸ்கரி என்ற இரு சுண்டெலிகள் ஹெம்,ஹா என்ற இரு குட்டி மனிதர்கள் செல்வதே கதையாகும்
** இங்கி சீஸ் என்பது உருவகம் .அது நம் வாழ்வில் பெற விரும்பும் ஒரு பொருளைக்குறிக்கும் நல்ல வேலை,வீடு,அங்கீகாரம்,அமைதி,ஆரோக்கியம் எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்
** இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் திடீரென்று ஒரு மாற்றத்தை சந்திக்கின்றன இறுதியில் ஒரு கதாபாத்திரம் அதை வெற்றிகரமாகக் கையாள்கிறது.
** வெற்றிக்கு காரணம் தன் அனுபவத்தில் தான் கற்றதை சுவற்றில் எழுதி வைக்கிறது மாற்றம் வரும்போது அதைப்பயன்படுத்துகிறது
இப்புத்தகத்தை படிப்பதன் மூலம் கீழ்கண்டவற்றைக் கற்றுக்கொள்ளலாம்
**மாற்றம் வரும் என்றுஎதிர்பார்த்து இருப்பது எப்படி
** மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக மாறுவது எப்படி
** மாற்றத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி
** மாற்றம் மீண்டும் மீண்டும் வந்தாலும் அதற்கேற்ப வேகமாக மாறுவது எப்படி
எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்ட இக்கதையை படித்து முடிக்க உங்களுக்கு ஒரு மணி நேரம் கூட ஆகாது.
** உங்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைத் திறம்படக்கையாள இந்தப்புத்தகம் உதவும்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments