*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:57
தேதி:21-09-2022
புத்தகம் எண்ணிக்கை:57
புத்தகத்தலைப்பு: பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்
ஆசிரியர்:அமுதன்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம். தனசேகரன். 'தினத்தந்தி' செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.
**அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை, 'கலாம் ஒரு சரித்திரம்' என்ற பெயரிலும், தஞ்சைப் பெரிய கோவில் பற்றி 'ஆயிரம் ஆண்டு அதிசயம்' என்ற பெயரிலும், எகிப்தின் பிரமிப்பூட்டும் பிரமிடுகள் பற்றி 'புதையல் ரகசியம்' என்ற பெயரிலும் எழுதியுள்ளார்
**இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் விஞ்ஞானம் உள்பட பல துறைகளில் நிறைந்த அறிவு பெற்று இருந்தார்களா என்பது குறித்து, 'பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்' என்ற பெயரிலும், இவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
**தினத்தந்தி ஞாயிறு மலரில் எது நிஜம்? என்ற தலைப்பில் வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்த இந்தத் தொடர், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம் என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.
**பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித ஆய்வுக்கூடங்களோ நவீன கருவிகளோ இல்லாத நிலையில் பழங்கால இந்தியர்கள் வானவியல், கணிதம், மருத்துவம், கடல் கடந்த வாணிபம் போன்ற பல துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை ஆற்றி இருக்கிறார்கள். இவை நமக்கு மலைப்பைத் தருவதோடு ஆச்சரியத்தையையும் அளிக்கிறது.
**இன்றைய கணிதத்துக்கு ஆதாரமான பூஜ்யத்தைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தது; அணுவைப் பிளக்க முடியும் என்று அறிந்து கூறியது.
**நானோ மீட்டர் என்ற அளவை விட மிகச் சிறிய அளவை முறைகளைப் பயன்படுத்தியது போன்ற எண்ணற்ற செய்திகள் நம் விழிகளை விரியச் செய்கின்றன.
**இதில் எது நிஜம்? அல்லது அவை கற்பனை கலந்த கட்டுக்கதைகளா? அவை நிஜம் என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்ற வினாக்கள் பல அரங்குகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கான விடையைத் தேடும் வகையில் பல அற்புதமான தகவல்களை அறிஞர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளின் துணை கொண்டு அழகிய முறையில் விளக்கம் அளித்துள்ளார், ஆசிரியர் அமுதன்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments