முதல்ஆசிரியர் நூலாசிரியர்: சிங்கிஸ் ஐத்மத்தோவ்

 



*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்

நாள்: 45

தேதி:09-09-2022

புத்தகம்:45

புத்தகத்தின் பெயர்: முதல்ஆசிரியர்

நூலாசிரியர்: சிங்கிஸ் ஐத்மத்தோவ்

தமிழில்: பூ.சோமசுந்தரம்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.       


** எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை உண்மையாக்கும் நாவல்

 

** எந்த வித கைமாறு கருதாமல் கல்விகற்பிக்கும்

ஆசிரியருக்கு மரியாதை தரவேண்டும் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என அவரிடம் கல்வி கற்ற மாணவி கருதுவது மிகவும் சிறப்பு இக்காலத்தில் வியப்பு

 

** கல்வியின் முக்கியத்துவத்தையும் 

ஆசிரியரின் சிறப்புக்களையும் உணர்த்தும் நாவல்

 

**சோவியத் நாட்டின் கிர்கீசிய பகுதியில் ஒரு மலையடிவாரத்தில், பரந்த பீடபூமியில், பல்வேறு கணவாய்களிலிருந்து சலசலவென்று ஒலியெழுப்பியபடி மலையாறுகள் வந்து குவியும் இடத்தில்  இருந்தது குர்கூரெவு கிராமம். இதன் கீழே  மஞ்சள் சமவெளி எனப்படும் பிரமாண்டமான கஸாக் ஸ்டெப்பி புல்வெளி நிலம் பரந்து கிடக்கிறது

 

** இந்த கிராமத்துப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பெற்று அங்கு வருகிற கல்வித் துறை அறிஞர் அல்தினாய் என்னும் பெண்மணி விழாவிலிருந்து திடீரென குழப்பமும், தடுமாற்றமும் மிக்க மனநிலையுடன் வெளியேறிப் போய் ரயிலேறி விடுகிறார். அதே விழாவிற்கு வந்திருக்கிற பிரபல ஓவிய ஆசிரியரும், இலக்கியப் படைப்பாளியுமான ஒரு இளைஞர் , அல்தினாயின் பதற்றத்திற்கான காரணத்தை அறியத் துடிக்கிறார். நகரத்திற்குத் திரும்பிச் சென்ற சில நாட்களில் அல்டினாய் இந்த இளைஞருக்கு எழுதுகிற தன் வரலாற்றுக் கடிதத்தின் வழியாக இந்த முதல் ஆசிரியர்  என்னும் இக்குறுநாவல் வளர்ந்து முடிவடைகிறது.

 

    **1924 ஆம் ஆண்டுகளில் சோவியத் அரசால் இந்தக் கிராமத்தின் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்க அனுப்பப்பட்ட இளைஞன் தூய்ஷன். இவனும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவன்தான், ஆனால் இவன் தந்தைக் காலத்திலேயே வேலை தேடி  ஊரைவிட்டு வெளியேறியவர்கள்தூய்ஷன் தன் நோக்கம் பற்றி கிராமத்து மக்களிடம் தெரிவிக்க, அதுவரை  கல்வியைப் பற்றி அறியாத அந்த கிராமத்தினர்படிப்பா? பள்ளிக்கூடமா? எங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?”  - என துக்கி எறிந்து போகிறார்கள். ஆனால் இதைக்கண்டு சோர்ந்து போய்விடவில்லை தூய்ஷன்.குதிரைக்கொட்டையை பள்ளியாக மாற்றிக்கற்பிக்கிறார்.

 

** தூய்ஷன் முறையாக கல்வி பயின்றவரில்லை, குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் கல்வி உளவியலும் அறிந்தவரில்லை. ஓரளவுக்கே எழுத்துக் கூட்டி படிக்க அறிந்தவர்ஆனால் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் தன்னிடம் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து அவர்களை உயர்த்துவதற்கு பொறுமையுடனும்  விடாமுயற்சியுடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தார் தூய்ஷன். தங்களிடம் அன்பு காட்டிய தனது ஆசிரியரிடம் மாணவர்களும் மிகவும் ஒட்டுதலுடன் இருந்தனர்.

 

**அல்தினாய் சுலைமானாவ் என்ற தாய் தந்தையை இழந்த, தன் சித்தி வீட்டில் வளரும் மாணவி முக்கியமானவர். கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வமும், வேகமும் மற்றும் அப்பள்ளியிலேயே வயதில் மூத்த மாணவியும் அவராவார். பல்வேறு துன்பங்களுக்கிடையே சிறப்பாக படிக்கிறாள்

 

** கிராமத்தில் படித்துவிட்டு மேல் படிப்பிற்கு நகரத்திற்குச் செல்லும் மாணவியான அல்தினாய்க்கு மிகச்சிறந்த கல்வி தந்து வளர்த்தெடுக்கிறது சோவியத் பாட்டாளி வர்க்க அரசு. விடாமுயற்சியுடன் உழைத்து கல்வி பயின்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுபின் பேராசிரியரும், துறையின் தலைவரும் ஆகிறார் அல்தினாய்.இவ்வாறு அவள் நகரத்தில் கல்வி பெறும்போது கடிதம் மூலம் தனது முதல் ஆசிரியனைத் தொடர்பு கொள்ள முயல்கிறாள்.ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை

 

  **பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் மேடையில் அல்தினாய் அமர்ந்திருக்கிறாள். அப்போது இந்தப் பள்ளியின் திறப்பு விழாவிற்காக பழைய மாணவர்கள் அனுப்பிய தந்திகளை  முதியவர் ஒருவர் குதிரையில் விரைவாக வந்து தந்துவிட்டு தனது அடுத்த பணியை கவனிக்கச் செல்கிறார். அவரைப் பற்றிய பேச்சு அங்கு எழுகிறது. அதிலிருந்து வந்து சென்றவர்  இங்கே இத்தனை படித்தவர்கள் உருவாகவும், பிரமாண்டமாக இப்பள்ளிக்கூடம் எழும்பவும் காரணமான தனது முதல் ஆசிரியர் தூய்ஷன் என்பதை உணர்ந்து துடித்துப் போகிறாள்

 

     **கல்வியின் கதவுகளை குர்கூரெவு கிராமத்திற்குத் திறந்து புதிய உலகத்தைக் காட்டிய  தூய்ஷன் , அதே கிராமத்தில் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருவதையும், அவர் இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு முதல் மரியாதை செய்யப்படாததையும் குறித்து மிகுந்த மன வருத்தம் அடைந்துதான் பள்ளி திறப்பு விழா நிகழ்விலிருந்து பாதியிலேயே அல்தினாய் வெளியேறுகிறாள்.  

சீரழிக்கப்பட்ட தன் வாழ்வை மீட்டு நகரத்தில் கல்வி அளித்து புதிய வாழ்வை அளித்த தன் முதல் ஆசிரியன்  தூய்ஷனின் நினைவுகளைப் பற்றி அல்தினாய்  எழுதும் கடிதமாக  நாவல் வளர்ந்து முடிவடைகிறது.

 

**ஆசிரியர் பணியே அறப்பணி

அர்ப்பணித்தவர்களின் புகழ்

என்றுமே அழிவதில்லை...!

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,   M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-

Bootstrap demo




Post a Comment

0 Comments