சே குவேரா ஆசிரியர்:தா.பாண்டியன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:80

தேதி:14-10-2022

புத்தகம் எண்ணிக்கை:80

*தலைப்பு: சே குவேரா

ஆசிரியர்:தா.பாண்டியன்

 

** பக்கத்திற்கு பக்கம் ஆர்வமாக படிக்கத்தூண்டும் அழகிய நடை

 

** மாபெரும் புரட்சியாளரின் வரலாற்றினை மிக ஆர்வமூட்டும் வகையில் எடுத்துக்கூறியுள்ளார்

 

**19 தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளார்

 

** பத்துமாதம் வரை காத்து இருக்காமல் ஒன்பது மாதத்திலே பூமியை முத்தமிட்டவர் சே குவேரா

 

** உலகறிந்த பெயர் சே. இது ஒரு மனிதரின பெயராகஅல்லாமல்,எழுச்சியையும்,புரட்சியையும்,அர்ப்பணிப்பையும்,வீரத்தையும்,தியாகத்தையும் குறிக்கும் சொல்லாகவே விளங்கி வருகிறது

 

**சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

 

**கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

 

** சே குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம்

 

**மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவைதவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களதுநூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.

 

** சே குவேரா வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன்அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற்கருத்துக்கள்போன்றவற்றைஎழுதி வந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர்குறித்துவந்துள்ளார்.

 

**புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக்லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

 

** சே குவேரா வின் தத்துவங்களும் பொன்மொழிகளும்

**மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.

 

**நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.

 

**எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

 

**போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

 

**விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.

 

**விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.

 

**எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

 

**எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல அபாயத்தை எதிர்கொள்கிறான்

 

**ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது.

 

**நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம்.

 

**நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்

 

**நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

 

**நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமனால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத்துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போது கூட, நாம் அதை வரவேற்கலாம்

 

**18 வது கட்டுரையில் சே வின் வாழ்க்கையை 

சுருக்கமாக எழுதியுள்ளார்

 

**19 வது கட்டுரையில் சே குறித்த தவறான கருத்துகள் மற்றும் வினாக்களுக்கு பதில் எழுதியுள்ளார்

 

** மரணத்தை வென்ற மாவீரன் சே குவேரா

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments