*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:85
தேதி:19-10-2022
புத்தகம் எண்ணிக்கை:85
புத்தகத்தலைப்பு: அகல் விளக்கு
ஆசிரியர்:மு.வ
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**ஒரு மனிதனின் முழுவாழ்வையும் வெளியிடும் ஆற்றல் மிக்க இலக்கிய வகையாகத் திகழ்வது புதின இலக்கியமாகும்.
** மனிதனின் அகவுணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் புதினத்திற்கு மட்டுமே உண்டு.
** கூர்ந்த அறிவும், கடின உழைப்பும் மிக்க மனிதர்கள் யாவரும் விரும்பும் இலக்கியமாகத் திகழ்வது புதினமாகும்.
** நாம் வாழும் கலாச்சாரம், பண்பாடு இக்காலத்தியச் சூழலை நாமே உணரும்படி முழுமையான வார்ப்பாகக் கண் முன்னே சமுதாயத்தைக் காட்டும் இலக்கியவகை புதினமாகும்.
** கல்வி, தன்னம்பிக்கையைத் தருகிறது. வாழ்க்கைக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. உலகியல் அறிவை வளர்க்கிறது. பண்பாட்டு நிலைக்கு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. இத்தகைய சிறப்புடைய கல்வியை அனைவரும் பெறுவது எவ்வாறு என்பதை அகல்விளக்கு என்னும் புதினத்தில் வேலு பாத்திரப்படைப்பின் வாயிலாக மு. வரதராசன் விளக்குகிறார்.
**படிக்கிற காலம் ரொம்ப நல்ல வாய்ப்பான காலம், காலத்தைப் பயன்படுத்திக்கிட்டு நல்லபடியா படிச்சிட்டுவா மாணவ பருவத்தில் தான் மனசுல கவலை இருக்காது. மனசை ஊன்றிப் படிச்சிடு. நல்ல படியா அஸ்திவாரம் போட்டுக்கோ, சும்மா வெறுமே படிப்போடு நின்னுடாதே, புதுப்புது மனிதர்களை
சந்தித்துப் பேசு. புதுப்புது அனுபவங்களை கத்துக்கோ, அது தான் படிப்போட நோக்கம் என்று வேலுவின் மூலம் கூறும் அறிவுரையிலிருந்து அறியலாம்.
** பாடப்புத்தகங்களை மட்டும் கற்றால் போதாது, பாடங்களுக்கு அப்பால் மனிதர்கள், ஊர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
**பாடத்திட்டங்களைத் தாண்டியும் கல்விப் பரப்பு அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். இஃது கல்வி பற்றிய அவரது புதிய சிந்தனையாகும்
** மாணவர்கள் தாமே பெற்றுக் கொள்ளும் அறிவையும் சேர்த்தே கல்விக்குரிய வரம்பாகக் கொள்ள வேண்டும் என்னும் மு. வரதராசன் புதிய கருத்து, எதிர்காலத்தில் கல்வித்துறை கருத்தில் கொள்ள வேண்டிய பயனுள்ள சிந்தனையாகும்.
**அகல்விளக்கு என்பது மு.வரதராசன்இயற்றிய புதினமாகும். இரு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாய சிந்தனைகளை கூறியுள்ளார்.
**சந்திரன், வேலய்யன் என்ற இரு நண்பர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது.சந்திரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அவள் அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள்.ஆதலால், சந்திரனின் வாழ்க்கை கவலைக்கிடமாக மாறுகிறது.வேலய்யனுக்கு ஒரு நல்வாழ்கை கிடைக்கிறது.பின்,அவன் சந்திரனைத் திருத்த முயல்கிறான்.இறுதியில், சந்திரன் இறந்து விடுகிறான்.இக்கதை இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைகிறது.
**மு. வ. வின் அகல்விளக்கு எனும் இந்நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
**இவரது அகல் விளக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments