9th Notes of Lesson Science TM November - Week 5

 



நாள்              : 28.11.2022 - 02.12.2022

வகுப்பு          : 9

பாடம்           : அறிவியல்




பாடப்பகுதி   : பாடம் 22 நுண்ணுயிரிகளின் உலகம்

கற்றல் விளைவுகள் : வாசித்தல், புதிய சொற்களை அடையாளம் கண்டு, அடிக்கோடிடுதல், பொருளறிதல், கருத்து வரைபடம் வரைதல், தொகுத்தல், எழுதுதல், உயர்சிந்தனை வினாக்களை உருவாக்குதல், உயர் சிந்தனை வினாக்களுக்கு விடையளித்தல்

அறிமுகம் :

1.   மழைக்காலங்களில் அடிக்கடி காய்ச்சல் வருகிறதல்லவா? அதன் காரணம் என்ன?

2.   பால் எவ்வாறு தயிராக மாறுகிறது?

3.   உணவு அருந்துவதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும் ஏன்?

4.   கழிவறை மற்றும் நமது சுற்றுச் சுழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ஏன்?

5.   பாக்டீரியா மற்றும் வைரஸை நுண்ணோக்கியைப் பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்களா?

இது போன்ற அடிப்படையான எளிமையான வினாக்களை எழுப்பி  மாணவச் செல்வங்களின் சிந்தனைத் திறனைத் தூண்டி அவர்கள் அளிக்கும் விடைகள் மூலமாகவும் சில எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் இப்பாடப்பகுதி அறிமுகம் செய்யப்படும்.


வாசித்தல்: இப்பகுதியில் உள்ள பாடத்தலைப்பு உபதலைப்புக்களை வாசிக்க வேண்டும். பாடப்பகுதியில் உள்ள புதிய சொற்களை அடிக்கோடிட்டு  படிக்கவேண்டும். மேலும் அன்றாட வாழ்வில் காணப்படும் எடுத்துக்காட்டுகளை கலந்துரையாடி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

கருத்து வரைபடம்


நுண்ணுயிரிகள் & வகைகள்:

அளவில் மிகச் சிறியவை - நுண்ணோக்கியால் பார்க்க இயலும்

 1.ஒரு செல் உயிரி : பாக்டீரியா   2. பல செல் உயிரி : பூஞ்சைகள்

  3.செல்களற்ற உயிரி: வைரஸ்

பாக்டீரியாக்கள் : புரோகேரியாட்டிக் உயிரி - உட்கரு மற்றும் செல் நுண் உறுப்புகள் அற்ற உயிரி - இடம்பெயர்வு உறுப்பு ( கசையிழை) - வடிவங்கள் (1.கோள வடிவ பாக்டீரியா (கோக்கைகள்) 2.கோல் வடிவ பாக்டீரியா ( பேசில்லைகள்)  3.திருகு வடிவ பாக்டீரியா (ஸ்பைரில்லா)

வைரஸ்கள் : இலத்தீன் சொல் - நச்சுத் தன்மை உடையது

அ) உயிரு்ள மற்றும் உயிர்ற பண்புகள்   

) வைரஸின் வகைகள் : 1.தாவர வைரஸ்கள்    2.விலங்கு வைரஸ்கள்         3.பாக்டீரியா வைரஸ்

பூஞ்சைகள்: பச்சையமற்ற உயிரி - பூஞ்சைகளின் உடலம் தாலஸ் - பூஞ்சைகளில் இனப்பெருக்கம் - தழை வழி இனப்பெருக்கம் - இரண்டாகப்பிளத்தல், மொட்டு விடுதல், துண்டாதல், பாலிலாஇனப்பெருக்கம்

நுண்ணுயிரிகளின் பயன்பாடு: 1. உயிரி உரங்களில் நுண்ணுயிரிகள் 2. உயிரியக் கட்டுப் பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள்  3.தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்

4. மருந்துகளில் நுண்ணுயிரிகள்

நோய்களும் நுண்ணுயிரிகளும் :

1. வட்டார நோய் (என்டெமிக்), 2.கொள்ளைநோய் (எபிடெமிக்), 3.பெருங்கொள்ளைநோய் (பான்டெமிக்) 4.தொடர்பற்ற நோய் (ஸ்பொராடிக்)

காற்றின் மூலம் பரவுதல் : வைரஸ் நோய்கள் ( சாதாரண சளி,தட்டம்மை,பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை) , பாக்டீரியா நோய்கள் ( காச நோய்,தொண்டை அழற்சி,கக்குவான் இருமல்)

நீரின் மூலம் பரவுதல்: வைரஸ் நோய்கள் ( போலியோ மைலிடிஸ்) , பாக்டீரியா நோய்கள் ( காலரா)

கடத்திகள் (Vector) வழியாக பரவும் நோய்கள் : மலேரியா, டெங்கு,  ஃபிலேரியா (Filaria)

விலங்குகளால் பரவும் நோய்கள் : பன்றிக் காய்ச்சல்,பறவைக் காய்ச்சல்

பாலியல் பரவுதல் நோய்கள் : எய்ட்ஸ், ஹெப்பாடைட்டிஸ்– பி

நோய்எதிர்ப்பு திறனூட்டல் : தடுப்பூசிகளும் மருந்துகளும்

தொகுத்தலும் வழங்குதலும் : 

 மாணவச் செல்வங்கள் தாங்கள் தொகுத்தவற்றை ஒவ்வொரு குழுவாக வழங்குவார்கள்

மதிப்பீடு

1. நீரினால் பரவும் நோய்..........

     அ) காசநோய்        ஆ) கக்குவான் இருமல்       

     இ) டிப்தீரியா         ஈ) டைபாய்டு

2. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மைஉறுப்பு

   அ) எலும்பு மஜ்ஜை   ஆ)குடல்       இ) மண்ணீரல்       ஈ) நுரையீரல்

3.விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினைவிவரி.

4. பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் தடுப்பூசி......

எழுதுதல்:

சில உயர்வகைச் சிந்தனை வினாக்களைஉருவாக்கச் செய்து அதனை வழங்கி எழுதி வரச்சொல்லப்படும்.

குறைதீர் கற்றல்:

மதிப்பீட்டுப் பகுதியின் மூலம் கடினப் பகுதிகளை அடையாளம் கண்டு ICT மூலம் எளிமைப்படுத்தி விளக்கப்படும்

தொடர்பணி :  உங்கள் பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதற்கான காரணத்தையும் கண்டு ஓர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவும்.


அன்புடன்      

இரா.சக்திவேல்

 பட்டதாரி ஆசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி

 மணக்கால் அய்யம்பேட்டை

திருவாரூர் மாவட்டம் 610104


Post a Comment

0 Comments