*தினம் ஒரு புத்தகம்*
நாள்:112
தேதி:15-11-2022
புத்தகம் எண்ணிக்கை:112
தலைப்பு:
மோட்டார் சைக்கிள் டைரிகள்
ஆசிரியர்:சேகுவேரா
தமிழில்: என்.ராமநாதன்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
**சேகுவேராவும் அவரது நண்பர் ஆல்பெர்டாவும் லா
பெட்ரோஸா என்னும் மோட்டார் சைக்கிளில் வட அமெரிக்காவை சுற்றிவரும் போது ஏற்பட்ட
அனுபவங்களின் தொகுப்பே இந்த நூல் ஆகும்
** மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போது
அவர்கள் ரசித்த காட்சிகள்,உபசரித்த மனிதர்கள்,பார்வையிட்ட காட்சிகள் போன்றவற்றை
டைரிகளில் குறித்து வைத்துள்ளதின் தொகுப்பே இந்த நூல்
**அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு,
வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண
அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன.
*" தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில்
எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப்
பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின்
முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது.
** ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப்
போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து,
மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது.
**எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக
உருமாற்றியது.
** சேகுவேரா புரட்சியாளராக மாறுவதற்கு இந்த
பயணமும் ஒரு அடிப்படை
** பல்வேறு விளிம்பு நிலை மக்களை பார்வையிட்டு
ஆராய்ந்து அறிய இந்த பயணமும் ஒரு வழிகாட்டி
** இந்த டைரியினை படித்ததன் விளைவு நம்
வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறித்து வைத்துக்கொள்ள ஆர்வம்
ஏற்படும் என்பது உறுதி
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments