*தினம் ஒரு
புத்தகம்*
நாள்:113
தேதி:16-11-2022
புத்தகம்
எண்ணிக்கை:113
புத்தகத்தலைப்பு:கள்ளிக்காட்டு
இதிகாசம்
ஆசிரியர்:கவியரசு
வைரமுத்து
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
** வைரமுத்து அவர்களின் சாகித்திய அகடமி விருது பெற்ற நாவல்
** அணை கட்டுவதால் அவ்விடத்தில் வசித்த மக்கள் இடம் விட்டு பெயரும்
போது ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் பதிவு செய்த நாவல்
**கவிஞர் வைரமுது எழுதிய ”கள்ளிக்காட்டு இதிகாசம்” 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
**கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம்.
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான்
கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய
போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது.
**வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது
பெற்றது. இதுவரை 1லட்சம்
பிரதிகளுக்குமேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது.
**கள்ளிக்காடு என்ற வறண்ட நிலத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையை
எந்த வித அலங்காரப் பூச்சும் இல்லாமல் அப்படியே நம் முன்னால்
நிறுத்தியிருக்கிறார். முழுமையான கிராமத்துப் படம் பார்த்து முடித்தது போல
இருந்தது.
**நகரத்துச் சத்தங்களில் இருந்து முற்றிலும் விலகி கிராமத்து
வாழ்க்கையில் நுழைந்து விடுவோம்.
**பேயத்தேவர், அவரது பேரன் மொக்கராசு, மகள்கள் செல்லத்தாயி & மின்னல், மனைவி அழகம்மா, மகன் சின்னு மற்ற கதாப்பாத்திரங்கள் முருகாயி.
**கடன் கொடுக்கும் வண்டி நாயக்கர் என்ற நண்பர், சிறிது நேரமே வந்தாலும் மிரட்டும்
நாயக்கர் வைப்பாட்டி, அந்த ஊர் பூசாரி மற்ற மக்கள் என்று ஒவ்வொருவரும் மனதில் பச்சக்
என்று ஒட்டிக் கொள்கிறார்கள்.
**ஒரு நாவலில் வர்ணனைகள் மிக முக்கியம். ஆசிரியர் சுற்று
சூழ்நிலைகளையும், ஒரு கதாப்பாத்திரம் எப்படி நடந்து கொள்வார், எப்படிப் பேசுவார், அவரது உடல் மொழிகள் விவரிக்கும் போது
தான் அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியும், நம் மனதிலும் அக்கதாப்பாத்திரம்
நிற்கும். இந்த நாவல் கதாபாத்திரங்கள் அப்படியே மனதில் பதிந்து விடுகிறார்கள்
**இந்நாவல் பேயத்தேவரின் வாழ்க்கைப் போராட்டங்களை விவரித்தாலும்
இறுதியில் கள்ளிக்காடு என்ற கிராமத்துடன் மற்ற கிராமங்களும் புதிய அணை
கட்டப்படுவதால் அழிவது, அதனால் பாதிப்புள்ளாக்கும் மக்களின் நிலை தான் மையக் கருத்து.
** நாவலை படிக்கும் போது நாமும் அந்த கிராமத்திற்கே சென்று விடுகிறோம்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர்
கணிதம் ,
அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments