*தினம் ஒரு புத்தகம்*
நாள்:123
தேதி:26-11-2022
புத்தகம்
எண்ணிக்கை:123
எண்ணிக்கை:132
தலைப்பு: நாலாவது
தூண்
ஆசிரியர்:எண்டமூரி
வீரேந்திரநாத்
தமிழில்: கௌரி
கிருபானந்தன்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
** ஒரு எழுத்தாளர் ,மொழிபெயர்ப்புகள்
மூலமாக வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம் பெறுவது மிகவும் அரிது அந்த வரிசையில.
எண்டமூரி குறிப்பிடத்தக்கவர்
**சுமார் 55 நாவல்கள் 25 திரைக்கதைகள் ஏராளமான சிறுகதைகளகயும் எழுதியுள்ளார்
** நாலாவது தூண் படிக்க ஆரம்பித்தது அதன் பெயர் வித்தியாசமானதாக
இருக்கிறது என்றுதான்
** படிக்க படிக்க விறுவிறுப்பு அதிரடி வெள்ளித்திரையில் காண்பது போல்
கதை ஓட்டம்
** கதையின் திடீர் திருப்பங்கள் தமிழ் மொழியில் இப்படி என்றால் மூல
மொழியில் எப்படி இருக்கும்
** பெண்கள் உயர்வாக சித்தரிக்கும் பாத்திரப்படைப்பு பல்லவி,சிவகாமி
** ஒரு திரைப்படம் பார்த்த பிரமிப்பு
** சாமியார் நான்கு வலுவான தூண்கள் தன்னைத் தாங்கி நிற்பதாகவும், அந்த நான்கு தூண்களைத் தாண்டித் தன்னை
எவரும் அசைக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் கட்டங்களில், முதல் மூன்று தூண்கள் இன்னார், இன்னார் என்று சொல்லிவிட்டு, நான்காவது தூண் எதுவென்பதை கடைசி வரை
சஸ்பென்சாகவே வைத்திருப்பதை இந்தக் கதையின் மிக வெற்றிகரமான உத்தியாக சொல்ல
முடியும்
**" மக்களுடைய அறியாமை" அது தான் என் பலம்! இவர்களை எளிதில்
ஏமாற்றிவிட முடியும், எனக்கெதிராக என்ன செய்ய முனைந்தாலும் அதைத் திசை திருப்பி விட்டு
விட முடியும்!அது தான் நான் சொல்லுகிற நாலாவது தூண் என்று கொக்கரிக்கிறான் வில்லன்
சாமியார்.
**ஒரு வழக்கமான முக்கோணக் காதல்.
**கதாநாயகனை நேசிக்கும் பெண் ஒருத்தி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல்
அவனுக்குத் தன்னுடைய காதலைச் சொல்கிறாள். கதாநாயகனுக்கோ அது வேறொரு பயந்தாங்குளிப்
பெண் சொல்வதாகவே தொடர்ந்து சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.பெண்தான்
பயந்த சுபாசம் அவள் பாட்டியோ, பேத்தியை எப்படியாவது கதாநாயகனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும்
என்று நினைப்பவள்.
இது ஒரு களம்.
**ஒரு ஊழல் அரசியல் வாதி, அவனோடு ஊழல் மயமான அரசு இயந்திரம், சாமர்த்தியமுள்ள அடியாள் பலம், சிக்கல்களில் இருந்து சாமர்த்தியமாகத்
தப்பிக்க உதவும் ஒரு சட்ட நிபுணர், இத்தனைக்கும் ஆதார சக்தியாக மூளையுள்ள ஒரு சாமியார், இவர்களுடைய குற்றக் கூட்டணி இந்திய
அரசியலையும் மீறி சர்வதேச அளவில் பரவத்தயாராயிருக்கும்சூழல், இதை எதிர்த்துப் போராட முடியாமல்
தவிக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இவர்களைக் கொண்ட இன்னொரு களம்.
** ஆதித்தயன் பாத்திரப்படைப்பு இளைஞர்களுக்கு பெருமை
**நம்முடைய அறியாமை, எதுவும் செய்ய முடியாதவர்களாக ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்
நின்று விடுகிற சுயநலம் தான், இங்கே நம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிற நாலாவது தூணாக
இருக்கிறது என்பதும் புரியும்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments