ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆசிரியர்: ஜெயகாந்தன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:132

தேதி:5-12-2022

புத்தகம் எண்ணிக்கை:131

புத்தகத்தலைப்பு: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

 

**நாவலின் நாயகி நாடக நடிகையான கல்யாணியும், நாயகன் முற்போக்கான பத்திரிக்கையாளன் ரங்காவும் ஒருவருக்கொருவர் விரும்பி மணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் மணவாழ்வின் போக்கில் கல்யாணியின் இயல்பு ரங்காவின் மனதில்அவள் தன் மேல் உண்மையில் காதல் கொண்டிருக்கிறாளா என்ற ஐயம் எழுப்புகிறது

 

**ஏராளமான விவாதங்கள் மூலம் தங்கள் நிலைப்பாடுகளை உறுதி செய்து கொள்கிறார்கள் இருவரும். ரங்கா கல்யாணியைப் பிரிந்து வாழ்வதென்று முடிவு செய்து விவாகரத்து கோருகிறான்.

 

** கல்யாணியும் அவளது இயல்புக்கு ஏற்ப அதற்கு ஒப்புக் கொள்கிறாள். ஆனால் இறுதியில் கல்யாணிக்கு ஏற்படும் சுகவீனம் மீண்டும் ரங்காவை அவளிடம் சேர்க்கிறது. இது மிகையுணர்ச்சி ஏதுமில்லாமலும் வெகு இயல்பாகவும் மிகவும் அறிவுபூர்வமான விவாதங்களின் வழியாகவும் சொல்லப்படுவதே இந்த நாவலின் வெற்றி.

 

**அந்த வகையில் மிக அற்புதமான ஆழமான விவாதங்களும் உரையாடல்களையும் கொண்ட நாவல் இது

 

**ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் காதலின் பங்கு பற்றி கல்யாணி சொல்வது எவ்வளவு ஆழமானதோ அதே அளவு அது ரங்காவின் விலக்கத்துக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

 

**“வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம் நேர்மை ஒழுக்கம் பரிவு ஆகியவைதான்,” என்று கல்யாணி சொல்வது மிக முக்கியமானது.

 

** கல்யாணியின் ரோஜாப்பூக்களுக்கான விருப்பை முன்வைத்து வாழ்வின் மெல்லுணர்வுகளுக்களுக்கான இடம் குறித்த விவாதமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

 

**மேலும் நாவலின் மையக் கருத்து செயல்படுவதற்கு ஜேகே பாத்திரங்களின் பின்னணியை அமைத்திருக்கும் விதம் குறிப்பிடத்தகுந்தது.

 

**தமிழ்ச் சமூகத்தில் மணவாழ்வு என்பது அந்தத் தம்பதியினரை பொறுத்த ஒன்று மட்டும் அல்ல. அவர்களது இரு குடும்பங்களும் இணைந்து உருவாக்கும் பந்தம் அது. அதில் பல்வேறு அதிகார மையங்கள் உண்டு.

 

** கல்யாணியின் தேவதாசி குலப் பின்னணியும், சுதந்திரமான நாடக நடிகை என்பதும் ஒரு நாடகக் குழுவின் அதிபர் என்பதும், ரங்கா மனைவியை இழந்து மகளை மனைவியின் பெற்றோர் வசம் ஒப்படைத்து தனித்து வாழும் முற்போக்கான பத்திரிக்கையாளன் என்பதும் இந்த நாவலின் மையக்கருத்துக்கு முக்கியமான அம்சங்கள்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments