டெல்லி: இன்று இரவு அனைவரும் 2023ஐ வரவேற்க உள்ளோம்..
ஆனால், இந்த 2023ஐ அனைவரும் ஒன்றாக வரவேற்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்..
எந்த நாடு முதலில் புத்தாண்டை வரவேற்க உள்ளது.. எது கடைசியாக வரவேற்கும் என்பதை பார்க்கலாம்.
இன்று 2022இன் கடைசி நாள்.. இந்த ஆண்டு உள்ளூர்
தொடங்கி சர்வதேசம் வரை பல நிகழ்வுகள் முக்கியமானதாக இருந்தது. அதிமுக உட்கட்சி விவகாரம்
தொடங்கி உக்ரைன் போர் வரை இந்தாண்டு முழுக்க பரபரப்பாகவே சென்றது.
இப்போது இந்தாண்டு கடைசி நாளுக்கு வந்துவிட்டோம்.
இன்று இரவு 12 மணிக்கு அனைவரும் 2023ஐ வரவேற்க உள்ளோம். 2023ஐ வரவேற்க அனைவரும் கோலாகலமாக
ரெடியாகி வருகின்றனர். கொரோனா குறைந்துள்ள நிலையில், கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளது.
புத்தாண்டு
ஆனால், இந்த 2023ஐ அனைவரும் ஒன்றாக
வரவேற்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நேரத்தைப் பின்பற்றுவதால், புத்தாண்டு கொண்டாட்டங்களும் வேறுபடும்.
பூமியில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 24 மணி நேரம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அதை விடச் சற்று கூடுதலாகவே இருக்கும்.
நேரம்
இதற்கு international date lineதான் காரணம்.
எந்த நாடு முதலிலும் எது கடைசியிலும் புத்தாண்டைக் கொண்டாட உள்ளது என்பதைப் பார்க்கும்
முன்பு சின்ன ஹிஸ்டரி. 1880களில் சர்வதேச பயணங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேர முறை இருந்ததால், தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்குக்
குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் எளிதாக நேரத்தைக்
கண்டறிய international date line முறை கொண்டு வரப்பட்டது.
முதல் நாடு எது
இது பசிபிக் பெருங்கடலின் நடுவில்
வடக்கிலிருந்து தெற்கே 180வது மெரிடியனைப் பின்தொடர்கிறது. அதாவது பிரிட்டன் நாட்டின்
கிரீன்விச் என்ற பகுதியை மையமாக வைத்து உலகம் முழுவதும் நேரம் கணிக்கப்படுகிறது. முதலில்
பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் தான் புத்தாண்டை முதலில் கொண்டாட உள்ளன. கிரிமதி
தீவு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள 10 மக்கள் வசிக்காத தீவுகளில் தான்
புத்தாண்டு முதலில் வரும்.
அடுத்தடுத்த நாடுகள்
அதாவது கிரிபட்டி என்ற நாடு
மொத்தம் 33 தீவுகளை உள்ளடக்கியது. அந்த நாட்டில் உள்ள கிரிமதி தீவு தான் முதலில் புத்தாண்டைக்
கொண்டாட உள்ளது. அதன் பிறகு டோங்கா, உள்ளிட்ட தீவுகளில் புத்தாண்டு வரும். இங்கு இந்திய
நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கே புத்தாண்டு தொடங்கிவிடும். அதைத் தொடர்ந்து ஓசியானியா
நாடுகளில் புத்தாண்டுகள் வரும். அப்படியே மெல்ல ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய
மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் புத்தாண்டுகள் வரும்.
கடைசி பகுதி
அதன் பிறகு அமெரிக்காவில் புத்தாண்டு
வரும். புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் பகுதி என்று பார்த்தால் அது தென் பசிபிக் பகுதியில்
உள்ள நியு மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகள் ஆகும். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள்
தான் புத்தாண்டை கடைசியாக வரவேற்பார்கள். இதற்குப் பிறகு இருக்கும் பேக்கர் தீவு மற்றும்
ஹவ்லேண்ட் தீவில் இதன் பிறகு தான் புத்தாண்டு வரும் என்றாலும் கூட இந்த இரண்டிலும்
மக்கள் யாரும் இல்லை.
மொத்தம் 25 மணி நேரம் :-
அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத் தான் இங்குப் புத்தாண்டு வரும். மொத்தத்தில் பார்த்தால் பூமியில் வசிக்கும் அனைத்து இடங்களும் ஒரு நாளைக் கடக்க 25 மணி நேரம் ஆகும். எனவே, இந்த புத்தாண்டு இன்று மாலை தொடங்கி 25 மணி நேரம் உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இது சற்றே குழப்பும் வகையில் இருந்தாலும் கூட இப்படித்தான் புவியியல் ரீதியாக இத்தனை ஆண்டுகள் நாம் புத்தாண்டைக் கொண்டாடி வந்துள்ளோம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புத்தாண்டுவரலாறு:
கி.மு. 45இல் ரோமானிய பேரரசர் ஜுலியஸ் ஸீசரால் உருவாக்கப்பட்டது
"ஜுலியன் நாட்காட்டி."
அதன் பின்னர் இத்தாலிய மருத்துவர் அலோயிஸியஸ் இலியஸ் இந்த
நாட்காட்டியில் சில திருத்தங்களைச் செய்தார்.
கி.பி. 1582, பிப்ரவரி 24 ஆம் நாளில் போப் 14 ஆம் கிரிகோரி இந்தத்
திருத்தப்பட்ட நாட்காட்டியை நடைமுறைப்படுத்த ஆணையிட்டார்.
அதன் காரணமாக இந்த நாட்காட்டி "கிரிகோரியன் நாட்காட்டி"
என்று அழைக்கப்படலானது. இதில் அப்போது ஆண்டுக்கு பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன.
1582 ஆம் ஆண்டிலிருந்தே இத்தாலி, எசுப்பானியா, போர்ச்சுகல்,
போலந்திய லுத்துவேனியன் பகுதிகள், பிரான்ஸ்,
இந்த நாட்காட்டியை நடைமுறைப்படுத்தத் தொடங்கின.
1700 ஆம் ஆண்டில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே, டென்மார்க்
ஆகிய நாடுகளும் இம்முறையை ஏற்றுக் கொண்டன.
1752 ஆம் ஆண்டில் மேலும் சில திருத்தங்களுடன் ஜுலை மற்றும் ஆகஸ்ட்
மாதங்கள் சேர்க்கப்பட்டு ஆண்டிற்கு 12 மாதங்களாக வடிவமைக்கப்பட்டது.
1752 ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தும், அமெரிக்காவும் இந்த
கிரிகோரியன் நாட்காட்டி முறையை ஏற்றுக் கொண்டன.
ஆங்கிலேயர்கள் இம்முறையை ஏற்றுக் கொண்டமையால் அவர்கள் ஆட்சி
புரிந்த நாடுகளிலும் இம்முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.
1753 இல் சுவீடன், பின்லாந்து நாடுகளும், 1873இல் ஜப்பானும்,
1874இல் எகிப்தும், 1896இல் கொரியாவும், 1912இல் சீனா, அல்பேனியாவும் , 1918இல்
சோவியத் ரஷ்யாவும், 1926 இல் துருக்கியும் என்றவாறு உலகம் முழுவதும் படிப்படியாக
இந்த கிரிகோரியன் நாட்காட்டி முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் சென்று நாடு பிடித்து காலனி ஆதிக்கங்களை
ஏற்படுத்திய இங்கிலாந்து, பிரான்ஸ் , போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் அனைத்துமே
இம்முறையை ஏற்றுக் கொண்டமையால் உலகம் முழுவதுமே இந்த நாட்காட்டி முறை நடைமுறைக்கு
வந்தது.
அதிலும் குறிப்பாக ஆங்கிலேயருக்கு முன்பே பிரான்ஸ் மற்றும்
போர்ச்சுகல் இம்முறையை ஏற்றுக் கொண்டிருந்தன. இருப்பினும் அதிக நாடுகளைப் பிடித்து
வைத்தமையால் இந்த நாட்காட்டி முறை தொடங்கும் ஜனவரி முதல் நாள்
"ஆங்கிலப்
புத்தாண்டு"
என்று
பரவலாக அழைக்கப்படுகிறது.
ஆயினும் மிகச் சரியாகக் கூறவேண்டுமாயின் இந்த கிரிகோரியன்
நாட்காட்டி முறையின் அடிப்படையில் ஆண்டு தொடங்கும் ஜனவரி முதல் நாளினை
"பன்னாட்டுப்
புத்தாண்டு நாள்"
என்பதே
சாலப் பொருந்தும்.
#குறிப்பு:
இந்தியாவினை அடிமைப்படுத்திய கொடுமைக்கார வெள்ளையர்கள் பயன்படுத்திய
ஆங்கிலப் புத்தாண்டினைத் தமிழர்களாகிய நாமும் பயன்படுத்தலாமா என்றெல்லாம் சில
பதிவுகள் தென்படுகின்றன.
கிரிகோரியன் நாட்காட்டி முறை கி.மு.வில் தொடங்குகிறது. அப்போது
ஆங்கிலம் என்றொரு மொழியே இந்த உலகத்தில் தோன்றவில்லை.
இந்தோ-அரேபிய எண்முறையைப் போல கிரிகோரியன் நாட்காட்டி முறை
உலகெங்கும் மத-மொழி-இன வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்
தமிழர்களாகிய நாமும் எவ்விதத் தடையுமின்றி பன்னாட்டுப் புத்தாண்டு நாளினைக்
கொண்டாடலாம்.
அனைவருக்கும் ஈராயிரத்திருபத்து மூன்றாமாண்டு புத்தாண்டு
நல்வாழ்த்துகள்.
~
தகடூர் ப.அறிவொளி.
==> Full Portion Model Question Paper Collection
==> Public Exam Question & Answer Key
==> Chapter Wise Question Collection
==> Slow Learner Study Material
==> Minimum Level Study Material
==> Topper Study Material
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும் பயன்படும். மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
UPLOAD YOUR DOCUMENTS =>>> CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் நமது இணையதளங்களில் போட்டித் தேர்விற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
===> Neet Study Material - Tamil & English
===> TNPSC GROUP - II / II A Question & Answer
===> TN - TET MODEL QUESTION & ANSWER
===> NTSE QUESTION & ANSWER
===> TRUST STUDY MATERIAL
===> TRUST QUESTION & ANSWER
===> NMMS STUDY MATERIAL
===> NMMS MODEL QUESTION & ANSWER
Competative Exam Study Material & Question
STD - 1 TO 12TH STUDY MATERIAL COLLECTION
by..,
Kani Maths Educational Group
0 Comments