*தினம் ஒரு புத்தகம்* - கி.வா.ஜெகந்நாதன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:225

தேதி:17-03-2023

புத்தகம் எண்ணிக்கை:225

புத்தகத்தின் பெயர் : கி.வா.ஜெகந்நாதன் 

ஆசிரியர் பெயர் :நிர்மலா மோகன் 

பக்கங்கள் :122 

விலை : 25 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

பதிப்பகம் : சாகித்ய அகடமி பதிப்பகம் குறிப்பு : இந்தப்புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது 

 

*கி வா ஜெகந்நாதன் என்று மூன்றெழுத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் மதிப்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டவர் கி.வா.ஜகந்நாதன் 

 

*தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையரின் முதன்மையான சீடர் 

 

*நாடோடி பாடல்களின் நண்பர் ,பழமொழிகளின் பாதுகாவலர்.

 

*இலக்கியங்களில் மனிதனை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் எனும் சீரிய குறிக்கோளுடன் சிறுகதைகளைப் படைத்தவர் 

 

*ஆசிரியராக கலைமகள் இதழை நடத்தியவர் 

 

*பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட பாடும் திறன் பெற்ற கவிஞர்

 

* தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சமயத்திற்கும்  ஆற்றிய தொண்டுகளால் கி.வா.ஜ. என்றுப்போற்றப்பட்டவர் 

 

*1906ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 11ஆம் நாள் பிறந்தார் தந்தை வாசுதேவ் ஐயர் தாய் பார்வதி அம்மாள் 

 

*குடும்ப சூழல் காரணமாக கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்

 

* இளம் வயதிலேயே தமிழ் எழுத்து ஆற்றலால் இளம் பூரணம் எனும் பட்டத்தைப்பெற்றார் 

 

*கடினமானது என்று கருதப்பட்ட சங்க இலக்கியங்களை கூட கதை போல மிக எளிமையாக கட்டுரை மூலம் கற்பித்தார் 

 

*திருமுருகாற்றுப்படை அரசு ,வாகிச கலாநிதி ,தமிழ்க்கவி பூசனம் ,உபன்யான சரஸ்வதி ,தவமணி செந்தமிழ்ச்செல்வர் போன்ற பட்டங்கள் பெற்றவர் கி .வா.ஜ

 

*கி.வா.ஜ  தொகுத்த நாட்டுப்புற இலக்கியங்கள் ஏற்றப்பாட்டுகள் ,திருமண பாடல்கள் ,தெய்வப்பாடல்கள், 

தமிழ்ப்பழமொழிகள் போன்றவை ஆகும்     

 

         *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments