*தினம் ஒரு புத்தகம்* - தமிழ் மொழி அமைப்புகள்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:251

தேதி:12-04-2023

புத்தகம் எண்ணிக்கை:251              

புத்தகத்தின் பெயர் :தமிழ் மொழி அமைப்புகள் 

ஆசிரியர் : முனைவர் ச.அகத்தியலிங்கம் பக்கங்கள் : 352 

விலை : 115 

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


* தமிழ் மொழி தொன்மையானது உலகின் மூத்த மொழிகளோடு வைத்து என்னத்தக்க பெருமை உடையது 

 

* தமிழ் மொழி 3000 ஆண்டு பழமை உடைய சங்க இலக்கியத்தையும் பல்வகை சிறப்புகள் அமைந்த இலக்கணம் ஆகிய தொல்காப்பியத்தையும் பெற்று இன்றும் வாழும் செம்மொழியாக தமிழ் உள்ளது 

 

* தமிழ்மொழியின் சீரிளமை திறத்தை காப்பவை மிகச் சிறந்த இலக்கண நூல்களை உலகின் இலக்கண வரம்பிலா மொழிகள் பல உள்ள நீண்ட நெடிய மரபை உடைய தமிழ் இலக்கியங்களாலும் இலக்கணங்களாலும் அழியாது தன்னை காத்து வருகிறது 

 

* தமிழ் மொழி மிக நன்றாக வரையறுக்கப்பட்ட அமைப்புகள் பெற்றிருப்பதால் இன்றும் இளமையோடு வீறு நடைப்போட்டு திகழ்கிறது 

 

*காலம் தோறும் தோன்றிய இலக்கணங்கள் மொழி பெற்ற வளர்ச்சி கூறுகளை பதிவு செய்துள்ளன அவ்வளவு காலங்களில் ஏற்படும் மாற்றங்களையும் இலக்கணங்கள் ஆவணப்படுத்தியுள்ளன 

 

*தமிழ் மொழி அமைப்பு பற்றியும் இலக்கணங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இந்த நூல் சிறந்த நூல் ஆகும் 

 

*பெரிய அளவில் உருவாக வேண்டிய ஒரு இலக்கணத்தை உள்ளத்தில் கொண்டு சிறிய அளவில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது 

 

*இந்த இலக்கண நூல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் பிறருக்கும் பயன்படுத்தும் நிலையில் உள்ள இலக்கண நூல் ஆகும் 

 

*ஒளியின் அமைப்பை சொல் அமைப்பை பல்வேறு இலக்கண கூறுகளின் அமைப்பை தொடர் அமைப்பை வாக்கியமைப்பை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது 

 

*இந்நூல் எந்த ஒரு இலக்கணக் கூறும் குறிப்பிட்ட ஒரு அமைப்பில் அமைந்துள்ளது என்பதை காட்டும் நிலையில் உள்ளது எனவே தான் இது தமிழ் மொழி அமைப்பியல் எனப்பெயர் பெறுகிறது 

 

*தமிழ் மொழியை அதிக பெருமக்கள் கன்னித்தமிழ் என்று அழைப்பார்கள் இளமையோடு என்றும் கன்னி போல் இருக்கும் மொழி என்று இதன் பொருள் 

 

*தமிழ் மொழி இன்றும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வழங்கப்படுகின்ற மொழியாகும் 

 

*மொழி இலக்கணம் என்பது மொழியின் அமைப்பு பற்றி கூறும் ஒரு அறிவியல் ஆக்கம் 

 

* விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இல்லாமல் ஒரு மொழியின் அமைப்பை அறிவியல் அடிப்படையில் சில கொள்கை கோட்பாடுகள் அடிப்படையில் வர்ணனை நிலையில் கூறுவது ஆகும் 

 

*ஒரு பொருள் இயற்பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பெயருக்கு பொருளாகி வருவது ஆகுபெயர் எனப்படும் 

 

*வேற்றுமைகள் எட்டு வகைப்படும் 

 

*சொற்கள் நான்கு வகைப்படும் 

 

*வனப்புகள் எட்டு வகைப்படும் 

 

*மெய்மயக்கம் இரண்டு வகைப்படும் 

 

*பாக்கள் நான்கு வகைப்படும்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments